சொக்லேட் பெட்டிகளில் இருந்து ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள்



சொக்லேட் பெட்டிகள் மூலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளன.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் மூலமே இந்த விடயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தொலைபேசிகளின் மதிப்பு விசாரணைகளின் பின்னரே மதிப்பிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.