விளையாட்டு மைதானங்களை அமைத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்



நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் விளையாட்டு மைதானங்களை அமைத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் கேந்திர நிலையமாக மாற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டுக்காக விளையாட்டு நட்சத்திர விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் எம்பிலிபிடிய மகாவலி மைதானத்தில் ஆரம்பமானது.
ஒன்பது மாகாணங்களையும் பிரதிதித்துவப்படுத்தும் விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு அதிகாரிகள் இந்த விழாவில் பங்குபற்றியுள்ளனர்.
இதேவேளை எம்பிலிபிடிய வைத்தியசாலையின் புதிய சத்திரசிகிச்சைப் பிரிவு இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.


அத்துடன் வைத்தியசாலைக்கான ஐந்து மாடி கட்டடம் ஒன்றுக்கும் இதன்போது அடிக்கல் நாட்டப்பட்டது.