இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தில் சட்டமாணி பட்டப்படிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.கடந்த காலங்களில் சட்டமாணித்துறையில் கற்றோர், பல துறைகளிலும் பரிணமித்துள்னர். தமிழ் மொழித்துறையில் கற்பித்தவர் கற்றறிந்த நீதிபதியாகத் தொழிற்படுவதுடன், கற்ற மாணவிகூட நீதிபதியாகத் தொழிற்படுகின்றர். இங்கு சட்டத்தில பட்டம் பெற்றோர் செல்லும் இடங்களிலெல்லாம் கோலோச்சுவதானால், சட்டமாணிப் பட்டத்துக்கான கேள்விகள் அதிகமாகும். பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தோற்றும், இப் போட்டிப் பரீட்சையில் தேர்வு செய்யப்படுவது, நுாற்றுக்கணக்கானோர் மட்டுமே.
முதலாம் வருடம் (மட்டம்-111) என அங்கு அழைக்கப்படுகின்றது. முதலாம் வருடத்தில், 4 பாடங்கள் உள்ளன. பரீட்சை விடைத் தாள்கள் கொழும்பிலுள்ள விரிவுரையாளர்களால் திருத்தப்படுவது வழமையாகும்.
இவ் வருடத்தில் 2016ம் வருடத்தில்,இறுதிப் பரீட்சைக்கு, தமிழ் மொழி மூலம், யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு நிலையங்களில் மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர். கணிசமாண மாணவர்கள் ஏனைய 3 பாடங்களிலும் சித்தியடைந்துள்ள போதிலும், அரசியலமைப்புப் பாடத்தில் தமிழ் மொழியில், தோற்றியோரில் மேற்போந்த 3 மா வட்டங்களிலும், 80 வீதத்துக்கு மேற்பட்டோர் சித்தியடையவில்லை.
பெறுபேற்றில் அதிருப்தி அடைந்த மாணவர்கள், தங்களது விடைத்தாள்களைத் மீளத் திருத்துமாறு கோரி, எழுத்து மூலக் கோரிக்கையொன்றினை பல்கலைக்கழக உப வேந்தவருக்கும், துறை சார்ந்தோருக்கும் அனுப்பிவைத்துள்ளனர்.
மட்டக்களப்பில், கடந்த 3 வருடங்களில், அரசியலமைப்பு பாடத்துக்கு தோற்றிய மாணவர்களுள் 50 வீதமானோர், சித்தியடையவில்லை. குறித்த விடயத்தை ஆய்வு செய்ய தேவை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குண்டு. அல்லது இவ்வாறுதான் இக் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டுமென்ற விளக்கங்களை மாணவர்களுக்கு அளிக்கவேண்டிய தேவைப்பாடு நாவல நிலையத்துக்குள்ளது.
குறிப்பிட்ட பாடத்தில் 80% அடையத் தவறினால், அந்த பாடத்தில், மாணவர்களுக்கு, உரிய பாட விளக்கங்கள் கொடுக்கப்படவில்லையா
அல்லது திருத்தியவரின் அறிவுக்கு ஏற்ப விடை எழுதப்படவில்லையா என்றும் வாதிட வேண்டியுள்ளது.
இதேவேளை, ஆங்கில, சிங்கள மொழி மூலம் மேற்போந்த நிலையங்களிலிருந்து, தோற்றியவர்கள் 80% சித்தியடைந்துமுள்ளனர்.
இது தொடர்பில், பல்கலைக்கழகம் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென்பது எமது தாழ்மையான அபிப்பிரயாமாகும்.


