#வந்து கொண்டிருக்கும் செய்தி:மியான்மரில் நிலநடுக்கம்




மியான்மர் நாட்டின் மத்திய பகுதியில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவில் 6.8 என பதிவாகியுள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உண்டான நில அதிர்வுகள் தொலைவில் உள்ள நாடுகளிலும் உணரப்பட்டது.
தாய்லாந்தின் பாங்காக் மற்றும் வங்கதேச தலைநகர் டாக்கா ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால், எந்த உயிரிழப்போ அல்லது சேதமோ ஏற்பட்டதாக இது வரை எந்த தகவலுமில்லை.