Hafeesul haq ( fathih)
சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டு யுத்தத்தால் இதுவரைக்கும் #மூன்றரை இலட்சம் பேர் கொல்லப்படுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல் பல இலட்சம் பேர் #லபனான், #ஜோர்தான் ,#துருக்கி, #ஜேர்மன் போன்ற நாடுகளில் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றாதாகவும் இன்னும் சில மத்திய தரைக் கடலில் தத்தளித்து கொண்டு இருப்பதாகவும் அவை மேலும் தெரிவித்துள்ளது. இவை இப்படி இருக்க இன்னொரு புறத்தில் #ஷீஆ கொடுங்கோலன் #பஷாரின் #கூட்டுப் படை மனித உயிர்களை குறிவைத்து அழித்து வருகின்றது.
இதன் காரணமாக சிரியா தேசம் மனித நடமாட்டம் இல்லாத வறன்ட பாலைவனமாக காட்சியளிக்கின்றது தற்போது சிரியா பிரதேசத்தில் 10 % மானவர்களே கொடூரமான தாக்குதல்களுக்கு மத்தியில் வாழ்த்து வருகின்றார்கள். இவர்களுக்கும் உண்பதற்கு உணவு இல்லாமல் உடுப்பதற்கு நல்ல ஆடைகள் இல்லாமல் உறங்குவதற்கு உறையுள் இல்லாமல் உய்ரைகக் கையில் வைத்து வாழ்ந்து வருகின்றார்கள்.
இன்னொரு புறம் அங்கு வாழ்கின்ற சிறுவர்களுக்கு #படிப்பதற்கு ஒழுங்கான வகுப்பறைகள் இல்லாமல் எழுதுவதற்கு கொப்பிகள் மற்றும் பேனைகள் இல்லாமல் தனது #எதிர்காலக் கனவுகளை கலைத்து கஷ்டத்தில் வாழ்கிறார்கள் எதிர்வரும் காலங்களில் இந்த சிறுவர்களின் நிலை எப்படி இருக்கப் போகின்றது என்று பார்த்தீர்களா ??
இப்படிக் கொடூர வறுமையினால் சிரியா சிறுவர்களின் இலட்சியக் கனவுகள் அழிந்து வருகின்றது இதற்கு சரியான தீர்வு எமது முஸ்லிம் நாடுகளே எடுக்க வேண்டும்.

