#அட்டாளைச்சேனை: கார்ரேஸ் மற்றும் சாகச நிகழ்வுகள்




(Suhaib Umerlebbe)
அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குள் கார்ரேஸ் மற்றும் சாகச நிகழ்வுகள் இடம் பெற்றன.
★★★★★★★★★★★

SOUTHERN MOTOR SPORTS CLUB இனால் RALLY SRI LANKA - 2016 இற்கான கார்ரேஸ் மற்றும் சாகஸ நிகழ்வுகள் 2016.08.06 ஆம்திகதி சனிக்கிழமை பி.ப.2.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரையில் நிகழ்வுகள் அம்பாரை மாவட்டம் தமணைப் பிரதேசத்திலிருந்து 8 ஆம் கட்டை வழியாக ஆலம்குளச் சந்தியிலிருந்து திரும்பி ஆலம்குளம், கொச்சிக்காச்சேனை, சம்பு நகர், முல்லைத்தீவினூடாக புதிய அட்டாளைச்சேனை பிரதேச சபையை வந்தடைந்தது.
இதில் கார்ரேஸ் மற்றும் கார் சாகஸங்கள் கூட நிகழ்த்தப்பட்டன. அந்நிகழ்வின் கண்கொள்ளாக் காட்சியினை ஆலம்குளம் மற்றும் அட்டாளைச்சேனை மக்கள் கண்டு இரசித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அந்நிகழ்வினை அக்கரைப்பற்று மக்கள் காணத்தவறிவிட்டனர்.
கார்ரேஸ் மற்றும் கார் சாகஸ நிகழ்வுகள் 2016.08.07 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையான இன்று கூட, நேற்று இடம் பெற்ற அதே வழியாக இடம் பெறவிருக்கின்றது.