இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கெ பண்டாரவினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இளைஞர் ஒருவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நள்ளிரவு 12.30 மணியளவில் பல்லம நகரத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பல்லம பாடசாலையில் வசிக்கும் 22 வயதுடைய துஷித மதுஷங்க என்பவரே தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
தான் உத்தியோகபூர்வ வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது குடிபோதையில் பாதையின் குறுக்காக சென்றதனால், தமது பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்ததாக கூறி, இளைஞர் ஒருவரை பல்லம பொலிஸ் நிலையத்தில் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார ஒப்படைத்துள்ளார்.
தான் குடிபோதையில் இருக்கவில்லை என்றும், தனிப்பட்ட குரோதம் காரணமாகவே தன்மீது இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தாக்குதல் நடத்தியதாக அந்த இளைஞர் கூறியுள்ளார்.

