அவுஸ்திரேலியா ஜெயித்தது



இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின், கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமான முதலாவது போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கையணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் இலங்கையணி சார்பாக தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களையும் குஷால் மென்டிஸ் 67 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜேம்ஸ் போக்னர் நான்கு விக்கெட்டுகளையும் மிற்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா  7விக்கெற்றுக்களை மாத்திரம் இழந்து வெற்றி  இலக்கை தனதாக்கி, 3 விக்கெற்றுக்களால் ஜெயித்தது.