திருப்பதியில் அதிகாலை தரிசனம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கார் சாரதியின் வருகைக்காக 10 நிமிடங்கள் காத்திருந்தததால் பொலிஸ் மற்றும் தேவாஸ்தான அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
மைத்திரிபால சிறிசேன, அரசு பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடைந்ததையடுத்து திருப்பதியில் அவர், இன்று அதிகாலை மனைவி சகிதம் தரிசனம் செய்தார்.
ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணா ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ஆகியோர் இலங்கை ஜனாதிபதியை வரவேற்றனர்.
தரிசனம் முடித்து விருந்தினர் மாளிகை செல்ல காரில் ஏறிய மைத்திரிபால சிறிசேனவின் கார் சாரதி தரிசனம் முடிந்து வராததால் 10 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது.
இந்தநிலையில் கார் ஓட்டுநர் தாமதத்தால் பொலிசார் மற்றும் தேவாஸ்தான அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது என, தமிழக ஊடகமான தினகரன் செய்தி வௌியிட்டுள்ளது.