வாழைச்சேனை கல்குடாவைச் சேர்ந்த முயற்சியாளரான றோசன் டயஸ் என்ற மாற்றுத் திறனாளிக்கு புணாணை 23வது படையணியின் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி 12 லட்சம் ரூபா செலவில் வீடு அமைத்துக் கொடுத்துள்ளதுடன் அதற்கான தளபாடங்களையும் வழங்கி வைத்தார்.
வீடு மற்றும் தளபாடங்கள் ஒப்படைக்கும் நிகழ்வு கடந்த வாரம்; கல்குடாவில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் இராணுவத்தளபதி ஹெட்டியாராச்சி,றோசன் டயஸ் மற்றும் அவரின் தாயார் ஆகியோர் இணைந்து நாடாவை வெட்டி வீட்டைத் திறந்து வைத்ததுடன் வீட்டிற்கான திறப்பை வீட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. நிருபா பிருந்தன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சசிக்குமார் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சா.அருள்மொழி மற்றும் கிழக்கு மாகாண சமூக சேவை உத்தியோகத்தர்கள், சமூக சேவை அபிவிரத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராணுவ உயரதிகாரிகளான லெப்டினன்ட் கேணல்களான அமுனுகம, துசார எனப் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
