#World breast feeding week
இவ்வுலகில் பிறக்கின்ற குழந்தைகள் அனைவருக்கும் தாய் பால் அருந்துகின்ற உரிமையும், தாய்மாருக்கு தங்களுடைய குழந்தைகளுக்கு தாய் பாலூட்டுகின்ற கடமையும் இருக்கிறது.
ஆகஸ்ட் முதல் நாள் தொடங்கி, 7 ஆம் நாள் வரை நடைபெறும் உலகத் தாய் பாலூட்டுதல் வாரத்தை முன்னிட்டு, சீனாவின் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த பரப்புரை நிகழ்வை காணலாம்.
குழந்தைகளுக்கு குறைந்தது ஆறு மாதங்கள் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் தாய் பாலூட்ட வேண்டும் சிந்தனையை பரவலாக்க உலகச் சுகாதார நிறுவனம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
குழந்தைகள் பிறந்த ஆறுமாதத்திற்கு தொடர்ந்து தாய் பாலூட்டுவதால், நோய் தொற்றுகளில் இருந்தும், இறப்பிலிருந்து குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றன என்பதை ஆய்வுகள் சுட்டுகின்றன.
அன்னையர் தங்களுடைய குழந்தைகளுக்கு தாய் பாலூட்டுவதை புகைப்படம் எடுத்து கொள்வதை வலியுறுத்தி ஐநா இந்த ஆண்டு பரப்புரை மேற்கொண்டுள்ளது.

