(க.கிஷாந்தன்)
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா கீழ்பிரிவு தோட்டத்தில் தேயிலை மலையில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டியிருந்த 08 ஆண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இச்சம்பவம் 06.08.2016 அன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவர்களில் 04 பேர் வைத்திய சிகிச்சையின் பின் வீடு திரும்பியதாகவும், 04 பேர் தொடர்ச்சியாக தங்கி சிகிச்சைப்பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

