இப்பபடியும் ஒரு விபத்து



நுவரெலியாவிலிருந்து வெலிமடை செல்லும் பிரதான விதியில் இராணுவ சிப்பாய் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் கால்வாய் ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா இராணுவ முகாமில் இருந்து தனது பணியை முடித்துவிட்டு வெலிமடை பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் போதே, வீதியை விட்டு விலகி வீதியில் ஓரத்தில் உள்ள 4 அடி கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவர் வெலிமடை குஇதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் வெலிமடை வைத்தியசாலையில் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளது.
குருத்தலாவ பகுதியை சேர்ந்த சாஜன் மேஜர் பாலித்த குமார வயது 39, இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.