(எஸ்.சதீஸ்)
சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான நிரந்தர சமாதானத்தையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தலில் ஊடகங்களின் பங்கு எனும் தொனிப்பொருளில் இரண்டு நாள் செயலமர்வு நடைபெற்றது.
பொலனறுவை ராமதா விடுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்(13,14) நடைபெற்ற இந்த வதிவிட செயலமர்வில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
இதில் நிலைமாற்று நீதி, புரிந்துணர்வு இன்மை, மக்களின் கருத்துக்களுக்கு தாக்கம் செலுத்தக்கூடிய விடயங்கள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இச்செயலமர்விற்கான அனுசரணையினை யு எஸ் எயிட் நிறுவனம் வழங்கியிருப்பதுடன், சட்டம் மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியம் நடைமுறைப்படுத்துக்கிறது.
வளவாளர்களாக சட்டம் மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் சட்டத்தரணி கே.ஐங்கரன், இலங்கை இதழியல் கல்லூரியின் விரிவுரையாளர் ஸ்ரீ பிருந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊடகவியலாளர்களுக்கான நிரந்தர சமாதானத்தையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தலில் ஊடகங்களின் பங்கு தொடர்பான இத்திட்டம் இலங்கையின் தமிழ் சிங்கள ஊடகவியலாளர்கள் பங்கு கொள்ளும்வகையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இது போன்ற பயிற்சிகள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்காக நடத்தப்படுகிறது,
இந்தப் பயிற்சிகளின் பின்னர் நிலைமாறு கால நீதி தொடர்பான விடயங்களை மக்களுடைய எதிர்பார்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து ஊடகவியலாளர்கள் மூலம் ஆக்கங்களை வெளிக்கொணரச் செய்யும் செயற்திட்டமும், சிறந்த கட்டுரை அல்லது ஆக்கத்தினை வெளியிடும் ஊடகவியலாளர்கள் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்படவுமுள்ளனர்.

