பின் தங்கிய பகுதிகளில் நீர் வழங்கலைத் துரிதப்படுத்துக!



(சுஹைப் உமறுலெப்பை)

அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் அருகிலும், அதன் பின் பகுதியிலும் உள்ள குடியிருப்பாளர்கள் நீரிணைப்பு வசதி இன்றி கடந்த பல வருடங்களாக கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் இணைப்பாளர் ஜனாப்.அல்ஹாஜ்A.L.மர்ஜுன் அவர்கள் தொடர்ச்சியாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அமைச்சரான கௌரவ.அல்-ஹாஜ்.றஊப் ஹக்கீம் அவர்களிடம் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைக்கமைய தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதித் தவிசாளர் ஜனாப்.சபீக் றஜாப்தீன் அவர்கள் 2016.08.19 ஆம் திகதி வெள்ளிக் கிழமை காலை 11.15 Am மணியளவில் அக்கரைப்பற்று மாநகருக்கு நேரடியாக விஜயம் செய்தார்.
அவர் உரிய இடத்தினைப் பார்வை இட்டு, அங்குள்ள மக்களுடன் கலந்து பேசி, மக்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து அவற்றைச் செவிமடுத்ததுடன், அங்குள்ள பொது மக்களிடம் தங்களுக்கு நீரிணைப்பு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்ததுடன், உரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அப்பகுதிக்கான நீரிணைப்பு வேலைகளைத் துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஜனாப்.அல்-ஹாஜ்.S.L.M.ஹனிபா மதனி அவர்கள் இங்கு வாழும் மக்களின் கஷ்டங்களைக் கவனத்திற் கொண்டு, மிக விரைவாக தங்கு தடை இன்றி நீரிணைப்பு வேலைகளைத் துரிதப்படுத்துமாறு பிரதித் தவிசாளர் அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க பல வழிகளிலும் ஆய்வுகள் செய்யப்பட்டு அதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன், Diesel இற்கான செலவினை இணைப்பாளர் ஜனாப்.அல்-ஹாஜ்.A.L.M.மர்ஜுன் அவர்கள் அவரது சொந்தச் செலவில் ஏற்றுள்ளார்.
பிரதித் தவிசாளர் அவர்களின் உத்தரவுக்கமைய அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் அருகில் உள்ள பகுதி மக்களுக்கு நீரிணைப்பு வழங்குவதற்கான நீர்க்குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் 2016.08.22 ஆம் திகதி திங்கட் கிழமை முதல் வேலைகள் நடை பெறுவதற்கான துரித ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்றிற்கான வருகையை முன்னிட்டு அதன் போது அவ்விடத்தில் தெம்பிலி மரம் ஒன்றும் நடப்பட்டது.
அதன் பின் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் இணைப்பாளர் காரியாலயத்திற்கு பிரதித் தவிசாளர் ஜனாப்.சபீக் றஜாப்தீன் அவர்களும், கிழக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் ஜனாப்.M.M.M.நசீல் அவர்களும், அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் (RM),
( O& M) ஜனாப்.J.Nasrul Careem அவர்களும், பிரதேச பொறியியலாளர் நளீம் அவர்களும் வருகை தந்து அதில் கலந்து சிறப்பித்தனர்.