கட்சியை கலைக்கும் நோக்குடனே அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்!



ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கலைக்கும் நோக்கிலேயே தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏன் இவ்வாறான முட்டாள் தனமான காரியங்களை செய்கிறது என்பது புரியாமல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் 15 வருடங்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப செயலாளராக பதவி வகித்துள்ளதுடன், 15 வருடங்கள் பெண்கள் அணித் தலைவியாகவும் இருந்துள்ளேன்.
அத்துடன், ஒவ்வொரு தேர்தல்களிலும், இரத்தினபுரி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தான் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, தன்னை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியமை கட்சியை கலைக்கும் நோக்கில், யாரால் செய்யப்பட்டதென்று தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.