(செ.துஜியந்தன்)
ஒரு காலத்தில் கல்வியில் கொடிகட்டிப்பறந்த தமிழ் சமுதாயம் இன்று அதனைக் கூட தக்க வைப்பதற்கு அரும்பாடுபட வேண்டியிருக்கிறது என்ற சிந்தனையுடன் அண்மையில் நடைபெற்ற புத்தாக்கப் போட்டி ஒன்றில் கை ஊனமுற்றேர் கால்களால் கணனி இயக்கும் முறையை கண்டு பிடித்த பாண்டிருப்பைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் தெய்வநாயகம் மதிவதன் சாதனை படைத்துள்ளான்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாண்டிருப்புக் கிராமத்தைச் சேர்ந்தவன் தெய்வநாயகம் மதிவதன். இலங்கை சட்டக்கல்லூரியின் இறுதியாண்டில் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறான் இம்மாணவன். இவன் சிறுவயது முதல் ஆராய்ச்சிக் குணம் மிக்கவனாக இருந்து வருகின்றான்.
எதையாவது புதிதாக கண்டு பிடிக்க வேண்டும் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவன். இதனால் சத்தமில்லாமல் பல கண்டு பிடிப்புக்களை கண்டுபிடித்து அதற்கு சொந்தக் காரனாகியுள்ளான். மதிவதன் இம்முறை கை ஊனமுற்றோர் கால்களால் கணனி இயக்கும் முறையினை கண்டு பிடித்துள்ளான். பாதணி(செருப்பு) ஒன்றில் கணனியை இயக்கக்கூடிய சகல ஆளி (சுவிச்)களையும் பொருத்தி கால்களால் கணனியை இயக்கக் கூடியவகையில் இதனை வடிவமைத்துள்ளான்.
இது கைகளை இழந்து தவிக்கும் பலருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அது மட்டுமல்ல ஒளியூட்டப்பட்ட பற்தூரிகை ஒன்றையும் இம்மாணவன் கண்டுபிடித்துள்ளான். நாம் பற்களை பற்தூரிகையினால் சுத்தம் செய்கின்ற போது பற்களிலுள்ள காவிகள்ரூபவ்பழுதடைந்துள்ள பற்கள் என்பவற்றை அவதானித்து பற்களைத் துலக்க முடியும். இதனால் ஒளியூட்டப்பட்ட பற்தூரிகை மிக்க பயனுள்ளதாக இருக்கின்றது. வீடுகளில் வீட்டுக்காவலுக்காக நாய்வளர்ப்பார்கள். இனி யாரும் நாய் வளர்க்கத் தேவையில்லை. இம்மாணவன் கண்டு பிடித்துள்ள வீட்டுப் பாதுகாப்புக்கான நாய் குரைக்கும் ஒளி எழுப்பும் கருவியை பயன்படுத்த முடியும். இது நாய்போல் குரைக்கும் இக்கருவியை எமது வீட்டு மதில்களிலோ முற்றத்திலோ பொருத்துவதன் மூலம் யாராவது வீட்டுக்கு வந்தால் நாய் குரைப்பது போன்று சத்தம் எழுப்பும்.
இச் சத்தம் சரியாக நாய் குரைப்பது போன்று சத்தம் எழுப்பும். இச் சத்தம் சரியாக நாய் குரைப்பது போன்றே அமைந்திருப்பதால் திருடர்கள் நுழைந்தால்கூட எமக்குக் காட்டிக் கொடுத்துவிடும் அளவிற்கு தத்ரூபமாக நாய் குரைக்கும் ஒலி உள்ளது.
இதே போல கணனி சூடாவதைத் தடுக்கும் மெத்தையை குளிராக்கும் கருவி போன்றவற்றையும் சட்டக்கல்லூரி மாணவன் மதிவதன் கண்டு பிடித்துள்ளான். சட்டக் கல்லூரி மாணவனாக இருப்பதினால் இலங்கை அடிப்படைச் சட்டத்தில் காணப்படும் தண்டனைச் சட்டத்தில் காணப்படும் தண்டனை சட்டக் கோவையை வாசிக்கும் ரோபோ இயந்திரத்தை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈபட்டுள்ளார். மதிவதனின் தந்தை தெய்வநாயகம் ஓய்வு நிலை கிராமசேவகர் இவரின் ஊக்கமே புதிய கண்டு பிடிப்புக்களை கண்டுபிடிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறுகின்றார். என்னதான் நாம் புதிய கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்தாலும் அங்கீகாரத்தை பெற்றக் கொள்வதற்கு போராட வேண்டியுள்ளது.
சிங்கள மாணவர்களுக்கும் அவர்களது புத்தாக்கங்களுக்கும் கொடுக்கும் முன்னுரிமைரூபவ் தமிழ் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அந்தளவிற்கு இனரீதியான பாகுபாடும் காட்டப்படுகின்றன. இவற்றை எல்லாம் தாண்டியே நாம் வெளிவரவேண்டியிருக்கிறது. என்னைப்போன்ற தமிழ் மாணவர்களை ஊக்குவிக்க அரசியல்வாதிகளும்ரூபவ் தனவந்தர்களும் கை கொடுக்க முன்வரவேண்டும். சட்டத்துறையில் விஞ்ஞானத்துடன் தொடர்புபட்டு பல புரட்சிகளை உருவாக்குவதே தனது இலட்சியம் என்கின்றார் மதிவதன். வறுமையான குடும்ப சூழலிலும் தனது திறமையினால் முன்னேறத்துடிக்கும் இம்மாணவனின் முயற்சிக்கும் ஊக்கமும் உதவியும் வழங்க அனைவரும் முன்வரவேண்டும்.


