டெஸ்ட் கிரிக்கெட்டில் # ரங்கன ஹேரத் -Hat Trick



இலங்கையின் சுழற் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹட்ரிக் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இந்த போட்டியின் 24 ஆவது ஓவரில் இந்த சாதனையை அவர் நிலைநாட்டியுள்ளார்.
அவுஸ்திரேலிய அணி சார்பில் அடம் வோக்ஸ், பீட்ட நெவில் மற்றும் மிச்சல் ஸ்டார்க் ஆகியோர் இவரின் பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
டெஸ்ட் போட்டி ஒன்றில் இலங்கை பந்து வீச்சாளர் ஒருவர் ஹட்ரிக் சாதனை நிலைநாட்டிய இரண்டாவது சந்தர்பம் இதுவாகும். இதற்கு முன்னர் இலங்கை அணி சார்பில் நுவன் சொய்சா இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஹேரத்தின் பந்துவீச்சுப்பாணியில் ஹட்ரிக் சாதனை 1892 ஆம் ஆண்டிலேயே நிகழ்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.