கிழக்கு பல்கலைக்கழகம் , விவசாய பீடத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இரண்டாவது தேசிய ஆய்வரங்கு -2016 வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் 30.08.2016 அன்று நடைபெற்று முடிந்தது.இதற்கான அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் T. ஜெயசிங்கம் அவர்களும் , சிறப்பு விருந்தினராக ஐக்கிய நாடுகளின் உணவுக்கும் விவசாயத்திற்குமான நிறுவகத்தின் (FAO) கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.கபில விக்கிரமசிங்க அவர்களும் , ஆய்வரங்கிற்கான ஆதார துருதியுரையாளராக (Key note speaker) கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராட்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் விவசாய மேலதிக பணிப்பாளர் கலாநிதி S.J அரசகேசரி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
விவசாய பீடத்தின் கலாநிதி P.சிவராஜா அவர்களின் தலைமையிலும்,கலாநிதி K.பிறேம்குமார் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்ற இவ்வரங்கின் கருப்பொருளாக 'நிலையான உணவு வினையோகத்திற்கு அயண மண்டல விவசாயம் எதிர்கொள்ளும் சவால்கள்' எனும் தலைப்பு அமைந்திருந்தது.சிறப்பு விருந்தினர் திரு.கபில விக்கிரமசிங்க அவர்களால் 'உணவுக்கும் விவசாயத்திற்குமான நிறுவகத்தினால் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு ஆற்றப்படும் பங்களிப்புகள்' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.ஆதார துருதியுரையாளராக கலந்து சிறப்பித்த S.J .அரசகேசரி அவர்கள் 'இலங்கை உலர்வலய விவசாம் எதிர்கொள்ளும் சவால்களும்,மைல் கற்களாக அமைந்த விவசாய ஆராய்ச்சி முடிவுகளும்'எனும் தொனிப்பொருளில் விசேட சொற்பொழிவாற்றினார்.
அங்குரார்ப்பண நிகழ்வின் ஒரு அங்கமாக ஆய்வுக்கட்டரைகளின் தொகுப் புத்தகம் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
இவ்வாய்வரங்கில் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்த ஆராய்ச்சியாளர்களால் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டது.இவற்றிலிருந்து மிகச்சிறந்த ஆய்வுக்கட்டுரை அளிக்கைக்கான விருதிற்கு ஒரு ஆய்வுக்கட்டுரை தெரிவு செய்யப்பட்டு அதனை வழங்கிய ஆராய்ச்சியாளருக்கு அவ்விருது வழங்கிவைக்கப்பட்டது.இத்தகைய விவசாய ஆய்வரங்கு 2017ம் ஆண்டிலும் விவசாய பீடத்தினால் நடத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
