தேசிய கைதிகள் தின கொடி வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கான நலன்புரித் தேவைகளை கருத்திற்கொண்டு வருடாந்தம் இந்த கொடி வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இலங்கை கைதிகள் நலன்புரி சங்கத்தின் தலைவர் பி.ஏ.கிரிவன்தெனிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு முதலாவது கொடியை இன்று அணிவித்தார்.

