துமிந்தவை பார்க்க நாமல் வெலிக்கடைக்கு



மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் சுகதுக்கம் விசாரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, காமினி லொகுகே ஆகியோர் வெலிகடை சிறைச்சாலைக்கு நேற்று விஜயம் செய்துள்ளனர்.
வெலிகடை சிறைச்சாலை அதிகாரியின் காரியாலயத்தில் வைத்து இருவரும், துமிந்த சில்வாவை சந்தித்துள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.