தேர்தலை நடாத்தும் வரை வரி செலுத்தாமல் இருப்போம் எனவும், இதற்கு அமெரிக்காவை முன்னுதாரணமாக கொள்வோம் எனவும் முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடாத்துவதற்கான கடப்பாடு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவில் இப்படி தேர்தல் பிற்போட்ட போது, அந்நாட்டு மக்கள் வரி செலுத்துவதை நிறுத்தியுள்ளனர். தங்களது பிரதிநிதியொருவர் இல்லாதவிடத்து நாம் வரி செலுத்துவதில் பயனில்லையென அம்மக்கள் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தில் அந்நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக வெற்றிபெற்றனர்.
நாமும் அமெரிக்காவை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும். தேர்தலை நடாத்தும் வரையில் நாமும் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது. இதனை அரசாங்கத்துக்கு செல்ல வேண்டும் எனவும் முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் ஜகத் அங்ககேயின் தலைமையில் நடைபெற்ற செயலமர்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

