இன்று காலை காங்கேசன்துறையில் ரயில் தடம்புரண்டு வீதியில் ஓடிய காட்சிகள் இதோ (photos) இன்று அதிகாலை காங்கேசன்துறையில் உரத்திராதேவி ரயில் தடம்புரண்ட காட்சிகள் பலரையும் வியப்பில் ஆள்த்தியுள்ளது…
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது
புகையிரதத்தின் கட்டுப்பாட்டு கருவி(பிரேக்) செயலிழந்தமையே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை புகையிரத திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
அத்துடன் இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் நிலையில் இதற்கு இன்று வா சரியான தீர்வு காண்படாமை பாரிய சவாலாக கூறப்படுகிறது.
இதனால் மக்கள் தொடர் சிக்கல்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத் தக்கது

