வாழ்வின் எழுச்சி +தாதியர் சேவை = (ஓரே நாளில்)



கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்ளீர்க்கும் போட்டிப் பரீட்சை மற்றும் அரச தாதியர் உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சை(அம்பாறையில் இடம்பெற்றது) ஆகிய பரீட்சைகள் மேற்குறிப்பிட்ட ஒரே திகதிகளில் இடம்பெற்றது.

இப் பரீட்சைகள் இரண்டும் ஒரே தினங்களில் இடம்பெற்றதனால் இதற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகள் பலர் இவ்விரு பரீட்சைகளில் ஒரு பரீட்சையினை எழுத முடியாத நிலைக்குக்கு தள்ளப்பட்டுளனர்.


இதனால் இவர்கள் தமது எதிர்கால வாழ்வில் பாதிப்பை அடையவேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக பரீட்சைக்கு விண்ணப்பித்தோர் சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.


இவ்வாறு தேசிய மட்டத்தில் பரீட்சைகள் நடைபெறும்போது பரீட்சாத்திகள் பாதிக்கப்படாவண்ணம் நடவடிக்கைளினையும் நடைமுறையினையும் குறித்த தரப்பினர் திட்டமிட்டு செயற்படவேண்டும்.


மற்றும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்ளீர்க்கும் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களில் போதிய தகுதிகள் இருந்தும் அவர்களுக்கு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறவில்லை எனவும், இது தொடர்பில் குறித்த பரீட்சை நாத்தும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டபோது அத் தொலைபேசி இலக்கம் செயற்படவில்லை எனவும், அன்றய தினம் விடுமுறை தினமானாலும் இவ்வாறான பரீட்சை நடைபெறும்போது அதற்கென தொடர்பு கொள்ளும்பொருட்டு செயற்பாடுகளை செய்திருக்கவேண்டும். 


எனவே மேற்கூறப்பட்ட விடயங்களால் பரீட்சாத்திகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.