மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக துரைராஜா நியமனம்



முன்னாள் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரலும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சிதம்பரன்பிள்ளை துரைராஜா, புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இன்று (15) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் அவர்களும் இதன்போது பங்கேற்றார்.