கூட்டு எதிர்க் கட்சி என்றொரு பெயர் தேர்தல்கள் ஆணைக்குழு புத்தகத்தில் இல்லையென ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
கூட்டு எதிர்க் கட்சியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் அமைப்பு, இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டது. இச்சந்திப்பின் போது பசில் ராஜபக்ஷவும் கலந்துகொண்டார். இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு கூறினார்.
புதிய கட்சியொன்றைப் பதிவு செய்வது தொடர்பில் உள்ள சிக்கல்கள் என்னவென இச்சந்திப்பின் போது கூட்டு எதிர்க் கட்சியினர் என்னிடம் வினவினர்.
இதுவரையில் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது நிறைவடையும் வரையில் புதிய கட்சிகளைப் பதிவு செய்வதற்கு அறிவித்தல் விடுக்க முடியாது.
யாராவது புதிய கூட்டணியொன்றைப் பதிவு செய்யப் போவதாயின் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பிப்பதற்கு ஆணைக்குழு விண்ணப்பம் கோர வேண்டும். புதுக்குடியிருப்பு தேர்தல் முடியும் வரையில் விண்ணப்பம் கோர முடியாதுள்ளது எனவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

