பாசிக்குடா கடற்கரை துப்பரவு



இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள்; பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில்  உத்தியோகத்தர்களால் பாசிக்குடா கடற்கரையின் சுமார் 5 கிலோமீற்றர் தூரம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை நடைபெற்ற நிகழ்விற்கு கரையோரம் பேணல் திணைக்களம் அனுசரணை வழங்கியிருந்தது. இந் நிகழ்வில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி, கல்குடா நாமகள் வித்தியாலய மாணவர்கள் மற்றும் கல்குடா பொலிசார், கடற்படை மற்றும் பிரதேச சபை,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  இணைந்து இச் செயற்றிட்டத்தை சிறப்பாக முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.