மஹிந்த, வெள்ளைத் தாமரையில் களமிறங்குகின்றார்




முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் நாட்களில் உருவாக்கப்படவுள்ள புதிய கட்சியின் சின்னம் வெள்ளைத் தாமரை எனவும், அக்கட்சியின் பெயர் இன்னும் இரு வாரங்களில் அறிவிக்கப்படும் எனவும் கூட்டு எதிர்க் கட்சியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் பிரதிநிதிகள் கூட்டணி தெரிவித்துள்ளது.
அக்கூட்டணியின் ஏற்பாட்டாளர் முன்னாள் பிரதேச சபை தலைவர் உதேனி அதுகொரல இதனை அறிவித்துள்ளார்.
எந்த தடை வந்தாலும் புதிய கட்சி உருவாகுவதைத் தடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.