சீலாமுனையில் இளைஞர் வெட்டிக் கொலை




மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீலாமுனைப் பகுதியில் நேற்று (15) வியாழக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

சீலாமுனை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள வீதியில் வைத்து மாமாங்கம் பகுதியை சேர்ந்த விஜித் சோமசிறி என்னும் இளைஞனே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த இளைஞரை, பின்தொடர்ந்து சென்ற இருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.