மங்கலகமவில் மின்னல் தாக்கியதில் இருவர் இறப்பு



அம்பாறை, மங்கலம பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

நேற்று மாலை 05.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது இவர்கள் மீது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். 

46 வயது ஒருவர் மற்றும் 20 வயதுடைய இளைஞர் ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.