ஏறாவூர் இரட்டைக் கொலை: சான்றுப் பொருட்கள் இன்று அடையாப்படுத்தப்படும்




ஏறாவூர் பிநூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) மற்றும் அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பாணுவும் கொலை செய்யப்பட்ட நிலையில், கடந்த 11ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டனர். 



இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் கௌரவ றிஸ்வி அவர்கள் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சான்றுப் பொருட்களை மன்றுக்கு அடையாளப் படுத்துவதற்காக குறித்த சந்தேக நபர்களையும், தடயப் பொருட்களையும் இன்று காலை 9 மணிக்கு ஆஜர் படுத்துமாறு, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர் சுற்றுலா நீதவான் கௌரவ றிஸ்வி பொலிசாருக்கும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் உத்தரவிட்டார்.
இவ் வழக்கு ஏறாவூரில்  இன்று    அழைக்கப்படும்