மஸ்கெலியாவில் #உலக அஞ்சல் தின நிகழ்வுகள்



(க.கிஷாந்தன்)

ஒக்டோபர் மாதம் 9ம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக தினத்தை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைவாக மஸ்கெலியா தபால் காரியாலயம் ஏற்பாடு செய்த உலக அஞ்சல் தின நிகழ்வு மஸ்கெலியாவில் 23.09.2016 அன்று வெள்ளிக்கிமை இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்ட அஞ்சல் அதிகாரி வினோதினி கார்த்திகேசு தலைமையில் இடம்பெற்ற மேற்படி அஞ்சல் தின நிகழ்வில் மஸ்கெலியா நகரில் வீதி நாடகம், துண்டுப்பிரசுர விநியோகம், ஊர்வலம் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது.

இங்கு தபால் நிலையத்தின் சேவைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட அஞ்சல் அதிகாரி வினோதினி கார்த்திகேசு, மஸ்கெலியா அஞ்சல் காரியாலயத்தின் பொறுப்பதிகாரி டி.எம்.என். பண்டார, உட்பட மஸ்கெலியா தபால் காரியாலயத்தின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், என பலரும் கொண்டனர்.