தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பல்வேறு போட்டிகள்



-காயத்திரி விக்கினேஸ்வரன்- 
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தினை அதிகரிக்கும் நோக்கில் நல்லூர் கிளை, நூலகம் பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளது. இதன் முதற்கட்டமாக நல்லூர் பிரதேச மாணவர்கள் மற்றும் நூலக அங்கத்தவர்களிடையே பல்வேறு போட்டிகளை நடாத்தவுள்ளது. 
சித்திரம் வரைதல், தமிழ் ஆங்கில வாசிப்புப் போட்டிகள், தமிழ் ஆங்கில கட்டுரைப் போட்டிகள், பொது அறிவுப்போட்டிகள் போன்றவற்றை நடத்தவுள்ளது. போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புவர்கள், தமது பெயர், பாடசாலை, தரம், தொலைபேசி இலக்கம் போன்ற விடயங்களை மாநகர சபையினூடாக நல்லூர் கிளை நூலகத்தில் இம்மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்