திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை இடம்பெற்ற இவ்விபத்தில், தோப்பூர், செல்வநகர் நூறூ வீட்டுத்திட்டம் பகுதியைச்சேர்ந்த 15-16 வயதுடைய இரு சிறுவர்களே உயிரிழந்துள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் பயணித்ததாகவும் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றையவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சடலம் மூதூர் தள வைத்தியசாலையின பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
விபத்தின் பின்னர் டிப்பர் சாரதி தப்பியோடியுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

