ரயிலில் மோதி ஓட்டமாவடி நபர் பலி




மட்டக்களப்பு ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை காலை  சென்றுகொண்டிருந்த உதயதேவி ரயில் மோதியதில், ஓட்டமாவடி Dr.பதியுதீன் மஹ்மூத் வீதியில் வசிக்கும்   3 பிள்ளைகளின் தந்தையான முஹம்மது அலியார் செய்யது இப்றாகிம் (வயது 45) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


ஓட்டமாவடிப் பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் மேற்படி நபர் நடந்து சென்று கொண்டிருந்தபோதே விபத்துக்கு உள்ளானார்.

மேற்படி நபர்  உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.