கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைருக்கு எதிராக அதிபர்கள் ஆர்ப்பாட்டம்




கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சுபைர், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயக் கல்விப் பணிப்பாளருடன் முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட சம்பவத்தைக் கண்டித்து அதிபர்கள் சுகயீன விடுமுறை எதிர்ப்பை இன்று (27) செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ளனர். 


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயக் கல்விப் பணிப்பாளருடன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சுபைர் திங்கட்கிழமை வலயக் கல்வி அலுவலகத்தில் வைத்து அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவத்தை கண்டித்து ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட 26 பாடசாலைகளின் அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டம் நடாத்தினர். 



இதன்போது இவ்விடயம் தொடர்பான சுகயீன விடுமுறை கண்டன அறிக்கையொன்றை ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்வி பணிப்பாளரிடம் அதிபர்கள் சங்கத் தலைவர் எம்.இஸ்மாயில் வழங்கி வைத்தார். 



மேற்படி சம்பவத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையிலும், இனியும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கிலும் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிபர்கள் தெரிவித்தார்