(இர்சாத்)
இப் படத்தில் உள்ளது அக்கரைப்பற்று HNB வங்கி அருகில் சுத்திகரிப்புச் செய்யாமல் கிடக்கும் வடிகானாகும். இது போன்றுதான் மாநகரின் ஏனைய வடிகான்களும்.
இப் படத்தில் உள்ளது அக்கரைப்பற்று HNB வங்கி அருகில் சுத்திகரிப்புச் செய்யாமல் கிடக்கும் வடிகானாகும். இது போன்றுதான் மாநகரின் ஏனைய வடிகான்களும்.
துப்புரவு செய்வதற்கு ஆட்கள் இல்லை என்று தட்டிக்கழிக்கும், மாநகர ஆணையாளர், மக்களின் வரிப்பணத்தினை வைத்து என்ன செய்கின்றார் என்ற கேள்வி எழாமலும் இல்லை. அப் பணத்திலாது வேலையாட்களை நியமித்து வடிகானைத் துப்புரவு செய்யாமல் முடங்கிக்கிடக்கின்றார்.அவரின் கீழ் சுகாதார அதிகாரியும் பணி செய்கின்றவர், அவரையாவது அனுப்பி அந்த இடத்தைப் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கவுமில்லை.
இது தவிர, அக்கரைப்பற்று பிராந்திய சுகாதார அதிகாரி தன் கீழுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்களை அனுப்பி, வீடு தோறும் டெங்கு ஒழிப்புக்காக பரிசோதனைகள் இடம்பெறுகின்றது. தவறு செய்கின்றனவர்கள் தண்டிக்க நடவடிக்கயும் எடுக்கப்படுகின்றது. இப் புகைப்படத்திலுள்ள, வடிகானை துப்புரவு செய்ய என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது மற்றுமொரு கேள்வி.
தமது கட்டுப்பாட்டையும் மீறி மாநகர ஆணையர், வடிகாணை துப்புரவு செய்ய (அதிலுள்ள சுரட்டையை, யோகற் கோப்பையினை, குப்பபையினை) நடவடிக்கை எடுக்காமல், குறித்த மாநகர ஆணையருக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்க எடுக்கவில்லை என்பதும் அடுத்த கேள்வி.
எனவே, அக்கரைப்பற்று மாநகர ஆணையாளரின் அசமந்தப் போக்கு, கவனயீனமாக இருக்கும் பிராந்திய சுகாதார அதிகாரி ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க மக்கள் தயாராகுவதற்கு முன்பு அக்கரையுடன் செயலாற்றுமாறு கோரிக்கை பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

