இலங்கையின் #முதலாவது தொழில்நுட்ப நகரின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்



மேல் மாகாண மாநகர திட்டமிடலின் கீழ் அமைக்கப்படும் தொழில்நுட்ப நகரின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
ஹோமாகம, பிட்டிபன, மாஹேனவத்தையில் 80 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த நகரம் அமைக்கப்படுகின்றது.
இதுவே இலங்கையில் அமைக்கப்படும் முதலாவது தொழில்நுட்ப நகரமாகும்.
செயற்றிட்டத்தின் முதலாவது கட்டத்தில் 05 நிறுவனங்கள் அடங்குகின்றன.
விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சு, ஆதர் சீ கிளார்க் மத்திய நிலையம் மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப விஞ்ஞானப் பீடம், ஶ்ரீ ஜயவர்தன மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பீடங்களின் நிர்மாணப் பணிகளும் இன்று ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டன.
200 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் இந்த செயற்றிட்டமானது 05 வருட கால எல்லையாகக் கொண்டமைந்துள்ளது.
ஹோமாகம முதல் கஹதுடுவ வரையான பகுதியை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வலயமாக அமைக்கும் செயற்றிட்டமும் மாநகர திட்டத்தில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.