லொறி தீப்பற்றியது



( எப்.முபாரக், பதுர்தீன் சியானா) 
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போட்டங்காடு சந்தியில் லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் பாய்ந்து தீப்பற்றியுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை பிறிமா தொழிற்சாலையிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற லொறியே, நேற்று வியாழக்கிழமை (01) மாலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.