பேர்கினி அணிந்தவர் வெளியேற்றப்பட்டுள்ளார்



பிரான்ஸின் கடற்கரையொன்றுக்கு பேர்கினி எனும் நீச்சல் உடை அணிந்து சென்ற அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில், ஸெய்னப் என அழைக்கப்படும் 23 வயது பெண், அவுஸ்திரேலிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “பேர்கினி” அணிந்து சென்ற போது, அங்கிருந்த பொதுமக்கள் நான் கடற்கரையை விட்டு வெளியேற வேண்டும் என கோஷமிட்டனர்” என தெரிவித்துள்ளார்.
முழு உடலையும் முழுமையாக மறைக்கும் பேர்கினி ஆடையை, பிரான்ஸ் கடற்கரைகளில் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த ஓகஸ்ட் மாதம் அகற்றப்பட்டது.
இருப்பினும், குறித்த தடையை விதித்த நகர மேயர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த போது, “பேர்கினியை அணிவதன் மூலம் மத சம்பந்தமான பிரச்சினைகள் எழக்கூடும். ஏற்கனவே ஐ.எஸ் தீவிரவாதிகள் இங்கு தாக்குதல்கள் நடத்தியுள்ளமையால் அது போன்ற நிலைமை ஏற்பட வாய்ப்புக்கள் அதிகளவில் உள்ளது என்பதாலேயே  பேர்கினிகளுக்கு தடை விதிக்கப்பட்டது” என தெரிவித்திருந்தனர்.