உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென் கிழக்காசிய வலயத்தின் 69ஆவது மாநாட்டையொட்டி, உடற்பயிற்சி பயிற்சி வேலைத்திட்டமொன்று, செவ்வாய்க்கிழமை காலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, உலக சுகாதார ஸ்தபனத்தின் ஆசிய வலயப் பணிப்பாளர் பூனம் கெத்ரபோல் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

