போராட்டத்துக்கு உயிரூட்டும் புதிய சக்தியின் ஆரம்ப கூட்டத்தை ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதி இரத்தினபுரியில் நடத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் புதிய அரசியல் சக்தியை வெளியிடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இது ஒரு கட்சியாக இருக்கும் அதேவேளை, ஒரு கூட்டமைப்பு என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியராச்சி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

