களுவாஞ்சிகுடி விபத்தில் ஒருவர் படுகாயம்




மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

இன்று காலை 10.30மணியளவில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த விபத்தில் மகிழூரை சேர்ந்த ரவிகரன் (35வயது) என்பரே படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். 

பஸ்ஸும் முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்டதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். 

படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.