அட்டப்பளத்திலுள்ள மின்வாயு நிலையத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்



நிந்தவூர் – அட்டப்பளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயிர்வாயு மூலமான மின் உற்பத்தி நிலையத்தை அகற்றக்கோரி நிந்தவூரில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை – நிந்தவூர் – அட்டப்பளம் பகுதியில் 2013 ஆம் ஆண்டு அனல் மின் நிலைய செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த அனல் மின் நிலையத்தினால் அம்பறை – காரைத்தீவு கிராமத்திற்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது, மின்சார நிலையத்தினை அகற்றக்கோரி கையழுத்து வேட்டையும் இடம்பெற்றது.
இந்த மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் புகை மற்றும் கழிவுகளினால் தாம் பல்வேறு நோய்த்தொற்றுக்குள்ளாவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.