கல்குடா கடலில் குழிக்கச்சென்ற இருவரை காணவில்லை



(வாழைச்சேனை நிருபர்)
கல்குடா கடற்கறையில் குளித்துக் கொண்டிருந்த நான்கு பேர் நீரில் மூழ்கியதில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் ஒரே கும்பத்தை சேர்ந்த இருவர் காணாமல் போயுள்ள சம்பவம் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
கல்குடா கடற்கரையில் ஐந்து இளைஞர்கள் சேர்ந்து ஒருவரைத் தவிர மற்றைய நான்கு பேரும் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீர் அடித்துக் கொண்டு செல்வதை அவதானித்த கரையில் இருந்த நண்பர் கூச்சலிட்டதில் மீனவர்களின் உதவியுடன் இரண்டு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களின் கல்குடா பட்டியடிச்சேனையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த எஸ்.சதிஸ்குமார் (வயது – 20), எஸ். சுரேஸ்குமார் (வயது – 17) என்ற அண்ணனும் தம்பியுமே நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளவர்களாவர். இவர்களை தேடும் பணியில் கல்குடா கடற்படை, கல்குடா பொலிஸார் மற்றும் மீனவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஏ.றஜிதன் (வயது – 16), கே.டிலக்சுமனன் (வயது – 16) மற்றும் காணாமல் போயுள்ள எஸ். சுரேஸ்குமார் (வயது – 17) ஆகியோர் கல்குடா நாமகள் வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி கற்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.