காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட கைது செய்யப்பட பண்டாரகம வர்த்தகர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை நீதவான் நீதிமன்றம் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
மொஹமட் நஸ்ரின் என்ற குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாக அவரின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் குறித்த நபரை ஹல்தமுல்லை பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

