இலங்கையர் என்ற ரீதியில் பொலிவூட் நடிகையான ஜக்குலின் பெர்னான்டோ அதிக பேஸ்புக் விருப்பங்களுடன் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இவர் பேஸ்புக் மூலம் 21,275,282 விருப்பங்களை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார 4,541,476 விருப்பங்களை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 1,107,781 விருப்பங்களை பெற்ற இலங்கையின் முதலாவது அரசியல் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ஸ 1,068,880 விருப்பங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

