பெரும்பான்மை தமிழ்மொழி மாகாணங்களான வடக்கினதும்,கிழக்கினதும் ஒன்றிணைப்பு,மற்றும் சமஷ்டி ஆட்சிவிவகாரங்கள் என்பவற்றுக்கு வடமாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரனேபொறுப்புக்கூற வேண்டிவரும்|. என்று கலைக்ககப்பட்டவட-கிழக்குமாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரும்,முன்னாள் ஏற்றுமதிஅபிவிருத்திஅமைச்சரும், முஸ்லிம் தேசியமுன்னணியின் செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி,வேதாந்திஎம்.எச். சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.
07.04.2016ல் வடமாகாண சபை சார்பாகமுதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் வடமாகாணசபையில் முன்மொழியப்பட்டதேசிய இனப்பிரச்சினைதொடர்பானஅரசியல் தீர்வுவரைபுகள் அச்சபையில் விவாதிக்கப்பட்டுஅம்மாகாண சபை தமிழ் பிரதிநிதிகளால் ஏகமனதாகஅங்கீகரிக்கப்பட்டுஏற்றுக்கொள்ளப்பட்டன.
அந்ததீர்வுவரைபில்,வடக்குகிழக்கு ஒன்றிணைத்தலின்போது முஸ்லிம் தன்னாட்சி பிராந்திய சபை உருவாகும் என்றும் அந்ததன்னாட்சிபிராந்தியத்தின் நிலை,பரிமாணம்,மற்றும் நியாயாதிக்கஎல்லைகள் ஆகியனதமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்டு முடிவு செய்யப்படவேண்டும் என்றும் ஏற்கப்பட்டுள்ளன.
எந்த முஸ்லிம் அரசியல் அமைப்பையும் கலந்துகொள்ளாதநிலையில் வடமாகாணசபைஉருவாக்கிய இந்ததேசிய இனப்பிரச்சினைக்கானதீர்வுத் திட்டத்தில்,வடக்குகிழக்கு முஸ்லிம்களின் தனித்துவத்தையும்,பிரத்தியேகஅரசியல் அடையாளத்தையும் ஏற்றுக் கொண்டதில் வடக்குகிழக்குஒன்றிணைத்தலின்போது முஸ்லிம் தன்னாட்சிபிராந்தியசபைஉருவாகும் என்றுதீர்வுத் திட்டத்தில் சேர்த்துக்கொண்டிருப்பதுவிக்கியின் நீதிநியாயத்தில் முஸ்லிம்கள் வைத்திருந்தநம்பிக்கையைகேள்விக்குட்படுத்தியுள்ளது.
எனினும்,வடக்குகிழக்குஒன்றிணைத்தல் என்றநிபந்தனைநடைபெறாதுவிடுமானால் எவ்வாறானஅதிகாரப்பரவலாகத்திற்கு இந்த இரண்டுமாகாணங்களும், இங்குள்ள இரண்டுதமிழ்மொழிச் சமூகங்களும் முகங்கொடுக்கநேரிடும் என்பதைப்பற்றிவிக்கிஎந்தசைக்கினையையும் செய்யாமல் விட்டிருப்பதும் ஒருகுறைபாடாகவேதெரிகிறது.
வஃகிஒன்றிணைக்கப்படாவிட்டால் வஃகிதமிழர்களுக்கும், வஃகி முஸ்லிம்களுக்கும் எவ்வௌ;விதமானஅதிகாரஏற்பாடுகள் பொருத்தமாக இருக்கும் என்பதைமுன்கூட்டியேசொல்வதில் வடமாகாண சபை சிக்கல்களைதவிர்த்துக் கொண்டதாகதெரிகிறது.
அவ்வாறானகுறைகளைதற்சமயத்திற்குஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு,மிகமுக்கியமானவிடயங்கள் பற்றிவடமாகாணசபையின் நிலைப்பாட்டைதெரிந்துகொள்ளவேண்டியிருப்பதுவடக்குகிழக்கின் இரண்டுதமிழ்மொழித் தேசியங்களினதும் மொத்தநன்மையைகருதியதேடலாகவே இருக்கிறது.
1956 ஆகஸ்ட் 19ல் திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் நான்காவதுமாநாடுநடைபெற்றது. அந்தமாநாட்டில் நான்குஅம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
அவற்றில் ஒன்று இணைக்கப்பட்டவடக்குகிழக்கில் ஓர் சுயாட்சிதமிழரசைஉருவாக்குவதென்பதாகும். அப்போதுஅந்தமாநாட்டில் கலந்துகொண்ட முஸ்லிம் உறுப்பினர்கள் வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கும் அவ்வாறானஅதிகாரப் பரவலாக்கத்திற்கானகோரிக்கையைமுன்வைத்தனர். இந்த முஸ்லிம் உறுப்பினர்களுடையகோரிக்கைக்கு இணங்கிஅதுவரை ஓர் சுயாட்சிதமிழரசுஎன்றகட்சியின் நோக்கத்தை ஷஷசுயாட்சித் தமிழரசும், முஸ்லிம் அரசும்|என்றவாறுநான்குஅம்சக் கோரிக்கைமாற்றிஅமைக்கப்பட்டது.
1956லேயே தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாகவாழும் வடக்குகிழக்குப் பிரதேசங்களில் தமிழர்களுக்குசுயாட்சித் தமிழரசும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவாழும் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்குசுயாட்சி முஸ்லிம் அரசும் என்றுதமிழரசுக் கட்சியின் நான்காவதுமாநாட்டில் எடுக்கப்பட்டபிரசித்திபெற்றதிருமலைதீர்மானம் இன்றையவடமாகாணசபைக்குதெரியாதவிடயம் என்றுஎப்படிநம்புவது?.
ஷஷதமிழ்பேசும் மக்கள் கோரும் சுயநிர்ணயஉரிமை - அவர்களின் ஓர் அங்கமான முஸ்லிம் மக்களுக்கும் உண்டுஎன்றஉன்னதசனநாயகதத்துவத்தின் அடிப்படையிலேஅம்முடிவுசெய்யப் பட்டதாகஅன்றுதமிழரசுக் கட்சிதெரிவித்திருந்தது.
அந்தஉன்னத சனநாயகத் தத்துவத்தின் அடிப்படையை வடமாகாண சபை அங்கீகரிக்கவில்லையா? அல்லது தமிழ்பேசும் மக்களின் ஓர் அங்கம் முஸ்லிம் மக்கள் என்றுஅன்று தமிழரசுக் கட்சிஏற்றுக் கொண்டதை வடமாகாணசபை இன்றுநிராகரிக்கின்றதா?
இந்த இரண்டுகேள்விகளுக்கும் வடமாகாணசபையின் பதில் இல்லை||என்பதாக இருக்குமானால் வகி தமிழர்களுக்கு சமஷ்டி ஆட்சிக்கும் வ/கி முஸ்லிம்களுக்கு தன்னாட்சி பிராந்திய சபைக்குமான தீர்வு வரைபுகளை முன்வைக்க வடமாகாணசபைக்கு எப்படிமனதுவந்தது?
அதுவும் ஒருபுறம் இருக்க,தமிழர் விடுதலைக் கூட்டணியின் 1977 தேர்தல் விஞ்ஞாபனம் பற்றிக் கூட வடமாகாண சபை எதிவும் அறிந்திருக்கவில்லையென்றுஎப்படிஎடுத்துக் கொள்வது?
அந்தவிஞ்ஞாபனத்தின் பிரிவு 2இல் அரசியல் அதிகாரம் பன்முகப்படுத்தப்படுவதுடன் எந்தஒருபிரதேசமோஅல்லதுஎந்தவொருசமயமோமற்றொருபிரதேசத்தைஅல்லதுசமயத்தைஅடக்கிஆள்வதற்குவாப்ப்புக் கிடைக்காதவிதத்தில் பல்வேறுபிரதேசங்களிலும் வாழ்ந்துவரும் மக்களுக்கெனசுவிட்சர்லாந்தில் உள்ளதைப்போலஒருசமஷ்டி ஆட்சிமுறைநிறுவப்படும்.
குறிப்பாக தமிழீழ அரசில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினாராக வாழ்ந்து வரும் பிரதேசங்களில் ஒருசுயாட்சி முறை ஏற்படுத்தப்படும்.
தமதுவிருப்பத்தின் பேரில் பிரிந்துசெல்லும் அடிப்படையில் அவர்களுடையசுயாதீனத்தைபாதுகாப்பதற்கும் தமிழர் விடுதலைக்கூட்டணிஉத்தரவாதம் அளிக்கிறது|,என்றுஅன்று நகமும் சதையும்போல்,தமிழரும், முஸ்லிம்களும் ஒட்டுறவாடிக்கொண்டிருந்தகாலத்திலேயே 1977ல் தமிழர் விடுதலைக்கூட்டணிஉத்தரவாதமளித்துள்ளது.
இந்தஉத்தரவாதம் பற்றி இன்றைய வடமாகாணசபைக்கு எதுவுமேதெரியாதா? தமது விருப்பத்தின் பேரில் பிரிந்து செல்லுவதை முஸ்லிம்கள் கற்பனைகூட பண்ணிப் பார்த்திராத அந்தக் காலத்திலேயே அதற்காக தமிழரசுக் கட்சியால் அளிக்கப்பட்டவாக்குறுதியையும்,தமிழர் விடுதலைக் கூட்டணியினால் அளிக்கப்பட்டஉத்தரவாதத்தையும் நிறைவேற்றிப் பார்க்கும் எண்ணம்கூட அன்று முஸ்லிம்களுக்கு இருந்ததில்லை.
1990 ஓக்டோபர் இறுதியில் வடமாகாணத்தில் வாழ்ந்துவந்தஅத்தனை முஸ்லிம்களையும் வடமாகாணத் தமிழர்கள்,வடமாகாணத்தைவிட்டும் விரட்டிஅடித்ததுவும், 1985ல் இருந்துகிழக்குமாகாண முஸ்லிம்கள் கிழக்குதமிழர்களால் அடக்கிஆளப்பட்டதுவுமாகச் சேர்ந்துதான் இன்று வஃகி முஸ்லிம்கள் தமதுவிருப்பத்தின் பேரில் பிரிந்துசெல்லும் தெரிவை தேடிக்க ள்ளவேண்டி நேரிட்டதுஎன்பதை வடமாகாணசபைமறுக்கமுடியுமா?
எனவே மேற்காட்டிய தமிழரசுக் கட்சியின் வாக்குறுதியும்,தமிழர் விடுதலைக்கூட்டணியின் உத்தரவாதமும் இணைக்கப்பட்டவடக்குகிழக்கில் முஸ்லிம்களுக்கான தனித்த பிரத்தியேகமான சமஷ்டி ஆட்சியேயே வலியுறுத்துகின்றன. எனவே, தமதுதீர்வுத் திட்டத்தில் வடமாகாண சபை
வ/கிதமிழர்களுக்கெனஒருசமஷ்டி ஆட்சியைகோரியுள்ளதைப்போல வ/கி முஸ்லிம்களுக்கும் ஒரு பிரத்தியேகமான சமஷ்டி ஆட்சியைவடமாகாணசபைகோரியிருக்கவேண்டும்.
அதைவிட்டுவிட்டு தமிழர்களுக்கு சமஷ்டி ஆட்சியும், முஸ்லிம்களுக்கு தன்னாட்சி பிராந்திய சபைக்குமான கோரிக்கைகளை வடமாகாண சபை முன்வைத்திருப்பது வ/கி. இல் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம்களை கீழ்நிலையிலும், வ/கி. இல் பெரும்பான்மையினராக இருக்கும் தமிழர்களில் தங்கியிருக்கும் வகையிலும் வடமாகாணசபையின் தீர்வுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதனால் வ/கி முஸ்லிம்கள் தமிழர்களின் முன்மொழிவுகளைஒ ருமித்தகுரலில் நிராகரிக்கின்றனர்.
1945ல் அதிகாரத்தை நாட்டு மக்களுக்குகையளிப்பதற்குரிய நேரம் வந்தபோதுஅப்போதையஅமைச்சரவையானது புதியஅரசியல் அமைப்புக்காக தமது சொந்த முன்மொழிவுகளை சமர்ப்பித்த போது மேற்சொன்னவற்றையே காரணம் காட்டிதமிழர்கள் ஒருமித்தகுரலில் நிராகரித்ததைவடமாகாண சபை தனது தீர்வுவரைபு கைநூலிலேயே வெளிப்படுத்தியுள்ளது. அன்றுஅவர்கள் உங்களுக்குச் செய்ததை இன்று நீங்கள் இவர்களுக்குச் செய்யலாமா? இரண்டுக்குமிடையே எந்தவேறுபாடும் கிடையாது.
வ/கி இணைப்பையே நேரடியாகப் பாதிக்கின்ற இந்தக் குறைபாடுகளிலிருந்து வடமாகாண சபை முதலில் தன்னை விடுவித்துக்கொண்டு, வ/கி இல் தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தமிழ்களுக்கு ஒரு சஷ்டி ஆட்சியும், முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்குஒருசமஷ்டி ஆட்சியும் என்று தமது தீர்வுத் திட்ட வரைபை திருத்தி வெளிப்படுத்தவேண்டும்.
முஸ்லிம் தன்னாட்சிபிராந்திய சபை என்றபெயருக்குப் பதிலாக முஸ்லிம் சமஷ்டி ஆட்சிஎன்று திருத்திக்கொள்ளுவது மட்டும் தான் செய்யவேண்டிஉள்ளதெல்லாம். அவ்வாறு செய்துவிட்டு எந்த மனக்கிலேசமும் இல்லாமல் வடக்குகிழக்கின் முழுத்தமிழ்மொழிப் பிரதேசங்களிலும்,தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வடக்கு கிழக்கு தமிழ்பேசும் இரண்டுதேசியங்களினதும் அபிலாஷைகளை வென்றெடுக்கும் செயற்பாடுகளில் ஒருமித்து இறங்கவேண்டும்.
இவ்வாறு செய்யப்படுமானால் கிழக்கு பிரிவினைவாத கெடுபிடிகள் அத்திவாரமில்லாமல் ஆட்டம் கண்டுவிடும்.
வ/கி முஸ்லிம்களுக்குசமஷ்டி ஆட்சிவழங்கக்கூடாதுஎன்றதவறான இறுமாப்பில் வடமாகாணசபைதனதுகுறைபாடுள்ளதீர்வுத் திட்டத்தையேமுன்னெடுக்கநாட்டம் கொள்ளுமானால்,அதுகிழக்கு முஸ்லிம்களைமட்டுமல்லாது,கிழக்குதமிழர்களையும் பலிக்கடாக்களாக்கும் நிலைக்கே தள்ளிக் கொண்டுசெல்லும்.
வடக்குகிழக்கு இணைப்புக்கும்,தமிழ் தேசியத்தின் வடக்குகிழக்கிற்கானசமஷ்டி ஆட்சிஅபிலாசைக்கும்,கிழக்குதமிழ் மொழிமக்களின் அதிகாரப் பரவலாக்கத்திற்கும் வேட்டுவைத்தபழியையும்,பாவத்தைம் வடமாகாணசபையே தூக்கிச் சுமக்கவேண்டிவரும்.
இந்தஉபதேசம் சகல முஸ்லிம் கட்சிகளுக்கும்,தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சேர்த்துத்தான் செய்யப்படுகிறது.

