குழு மோதலில் மாணவன் பலி



வெலிப்பன்ன பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 16 வயதான பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தையடுத்து, ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இக் குழுக்களுக்கிடையேயான கிரிக்கெட் விளையாட்டின் போது வெள்ளைப் பந்து தொடர்பில் எழுந்த சர்ச்சையை அடுத்து, துடுப்பாட்டத்தினாலேயே குறித்த மாணவன் அடித்துக்கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.