மாத்தறையில் பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் சிறைச்சாலையில் உள்ள மலசலக்கூடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
48 வயதான குறித்த நபர் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பாக குற்றஞ்சுமத்தப்பட்டு 12 வருட சிறைத்தண்டனை பெற்ற கைதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபரின் சடலத்தை அதிகாரிகள் இன்று அதிகாலையே மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மாத்தறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதையடுத்து அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
மக்கள் ஏற்படுத்திய பெரும் பதற்றத்தின் பின்னர் அரசியல் வாதிகளின் தலையீட்டினால் நிலைமை சுமூகமானது.
இந்த சிறைச்சாலையில் ஏற்படும் மர்மமான மரணங்கள் என்பது அண்மைக்காலங்களில் அதிகமாக ஏற்பட்டு வருகின்றது. சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளுக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லை என குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.
இந்த நிலை இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் காணப்படுகின்றது. நேற்று சுவாதி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ராம்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அதுமட்டுமல்லாது, ராஜிவ் காந்தி கொலை தொடர்புடன் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளன் சக கைதி ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்டார்.
இதன் தொடர்பாகவே தற்போது இலங்கையிலும் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. நேற்று புஸ்ஸல்லாவயில் ஒருவர், இன்று மாத்தறையில் ஒருவர் என சிறைச்சாலை வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
பல குற்றங்களை செய்தவர்களும், தண்டனை அனுபவிப்பவர்களும், குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள், சிறைச்சாலை அதிகாரிகள், காவலாளிகள் என சிறைச்சாலையில் உள்ளார்கள்.
இவ்வாறிருக்க ஆபத்து எந்த வழிகளில் வருகின்றது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் ஏற்படும் மரணங்கள் தற்கொலைகள் அதிகரிக்காமல் இருப்பதற்கு சிறைச்சாலைகள் அமைச்சு மற்றும் பொலிஸார் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகின்றது.

